ஆகஸ்டில் வரவுள்ள சிட்ரோயன் பஸால்ட் எஸ்யூவி வெளியானது

கூபே ஸ்டைல் பஸால்ட் எஸ்யூவி மாடல் ஆனது இந்தியாவில் சிட்ரோயன் (Citroen Basalt) நிறுவனத்தால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தற்போது உற்பத்தி நிலை மாடலின் படங்கள் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற C3 ஏர் கிராஸில் இடம் பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் இன்ஜினை பயன்படுத்திக் கொள்ள உள்ளது. Citroen Basalt பஸால்ட் மிக நேர்த்தியான கூபே ஸ்டைலாக அமைந்த டாடா கர்வ் உட்பட … Read more

டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கொழும்பில்

இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் கொழும்பில் நடைபெற உள்ளது. இந்நடமாடும் சேவை நாளை 27 மற்றும் 28 நாளை மறுதினம் ஹோமாகம பொது விளையாட்டரங்கில் இடம்பெறும். கௌரவ அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை தொழில்வாய்ப்புக்களை தேடுவோர் மற்றும் பணியில் கடமையாற்றுபவர்களுக்கு பங்களிப்பை வழங்குவதன் மூலம் சமூகத்தில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை … Read more

உயிர் பிரியும் தறுவாயிலும் குழந்தைகளைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர் – மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே வேனில் அவரது மனைவி லலிதாவும் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை சேமலையப்பன் வேனில் அழைத்துச் சென்றுள்ளார். வெள்ளகோவில் காவல் நிலையம் … Read more

விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டியில் புதிய நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று மாலை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றமும், வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் தொடக்க விழா அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை … Read more

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கை 2.5% அதிகரிப்பு: அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, “நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து … Read more

மீண்டும் இணைந்த ‘ஜோ’ ஜோடி! படப்பிடிப்பு நிறைவடைந்தது..

ஜோ” திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ்  மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!  

நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு… விஷாலை வைத்து படம் எடுக்க தடை…

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. சங்க பண முறைகேடு விவகாரம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சங்கத்தில் இருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட ரூ. 12 கோடியை திரும்ப தரவேண்டும் என்றும் விஷாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Simbu: தக் லைஃப் படத்தின் டப்பிங்கை துவங்கிய சிம்பு.. அட வேகமாத்தான் வேலை நடக்குது!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்து நடித்து வருகிறார். முன்னதாக

ஏற்றத்தாழ்வுகள் பார்க்கிறதா பிசிசிஐ? உண்மையை உடைத்த நடராஜன்

சென்னை, இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிசிசிஐ எனக்கு … Read more

3.89 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் சுசூகி

சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் அவெனிஸ் 125 என மூன்று ஸ்கூட்டர்களிலும் ஏற்படுகின்ற ஸ்டார்டிங் கோளாறு, வேக சென்சார் மற்றும் திராட்டிள் சென்சாரில் ஏற்படும் கோளாறினை சரி செய்வதற்கு திரும்ப அழைக்கப்படுகிறது. Suzuki Recall ரீகால் தொடர்பான அறிவிப்பில் ஏப்ரல் 30, 2022 முதல் டிசம்பர் 3, 2022 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்டார்டிங் செய்வதற்கான Ignition coilல் நிறுவப்பட்டுள்ள ஒரு தவறான உயர் அழுத்த … Read more