Top Farmers India: இந்தியாவின் டாப் பணக்கார விவசாயிகள்… சாதித்தவர்களின் விவரம்…

விவசாயம் என்றாலே நொடிந்து போகும் ஒரு தொழில், அதில் லாபமில்லை; மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். விவசாயம் செய்தால் நஷ்டம் வரும் என்ற பேச்சுகளுக்கு மத்தியில் விவசாயத்தில் சாதித்து வருபவர்களும் இருக்கிறார்கள். மற்ற தொழில்களை போலவே இதிலும் ஏற்ற, இறக்கங்கள் உண்டு. விவசாய விளைபொருள்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும், 2013 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பங்களின் சூழ்நிலை மதிப்பீட்டுக் கணக்கெடுப்பின்படி, ஒரு சாதாரண இந்திய விவசாயக் குடும்பம் ஆண்டுக்கு … Read more

நீலகிரி கனமழை பாதிப்பு: ராட்சத மரம் விழுந்து காவல் நிலையம் சேதம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத மரம் விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வறண்டிருந்த அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. காற்று மற்றும் மழை காரணமாக மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் … Read more

கடந்த 5 ஆண்டுகளில் யானை – மனித மோதலில் 2,500+ பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் யானை – மனித மோதல்களில் 2,853 பேர் உயிரிழந்துள்ளனர்; அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தான் சிங் வியாழக்கிழமை கூறியதாவது: யானைகள் தாக்கி, கடந்த 2019-ம் ஆண்டு 587 பேரும், 2020-ம் ஆண்டு 417 பேரும், 2021-ம் ஆண்டு 557 பேரும், 2022-ம் ஆண்டு … Read more

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” – ஒபாமா ஆதரவு

நியூயார்க்: “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்ற ஆதரவுக் குரல் மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசுபொருளானது. அதேநேரம், பிரபல அமெரிக்க பத்திரிகை … Read more

SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ!

சான் பிரான்சிஸ்கோ: ‘SearchGPT’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இது பயனர்களுக்கு தகவல்களை திரட்டுவதில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். இந்தச் … Read more

ராயன் முதல் நாள் வசூல் நிலவரம்.. வசூல் வேட்டையில் தனுஷ்

Dhanush Raayan Box Office Collection Day 1: தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வரை ராயன் திரைப்படம் செய்துள்ளது வசூல் நிலவரம் எவ்வளவு என்று பார்ப்போம்.

பாஜக அரசு ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக அரசு ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் எனக்  கூறியுள்ளார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், … Read more

ராணிப்பேட்டையே வியந்துடுச்சு.. வேலூர் முழுக்க \"இவங்கதான்\".. ஒளிரும் பெண்மை – மிளிரும் தாய்மை.. சபாஷ்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் என்ன நடக்கிறது? ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான அதிரடிகள்தான் இந்த மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபகாலமாகவே வடமாவட்டத்தை கலக்கி கொண்டிருக்கிறார்கள் பெண் அதிகாரிகள்.. கோவை மாவட்டத்திலும் நிறைய பெண் அதிகாரிகள் பொறுப்பில் உள்ளனர். கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, போலீஸ் உயர் பதவிகளில், கடந்த சில வருடங்களாகவே Source Link

Raayan: ராயன் கதை அழுத்தமா இல்ல.. கோட்டை விட்ட தனுஷ்.. செய்யாறு பாலு விமர்சனம்!

சென்னை: ராயன் தனுஷின் 50வது படம் என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்த தனுஷ், அண்ணன்

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

லக்னோ கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக … Read more