"என் புது BMW கார்ல குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனதுக்கான காரணம் இதுதான்!" – KPY தங்கதுரை நெகிழ்ச்சி

`கலக்கப்போவது யாரு?’ டிவி புகழ் மற்றும் சினிமா நடிகருமான தங்கதுரை தனது பிஎம்டபிள்யூ காரில் ஏழைக்குழந்தைகளை ஏற்றிச்சென்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரீஷ் கல்யாணின் ‘டீசல்’, பிரபுதேவாவின் ‘ஜல்சா’, மிர்ச்சி சிவாவுடன் ‘சலூன்’, பாபி சிம்ஹாவுடன் ‘தடை உடை’ ஜெய்யுடன் ஒரு பெயரிடாதப்படம், ‘ஹிப்ஹாப்’ ஆதி, அர்ஜுன் படம் என டஜன் கணக்கில் பிஸியாக நடித்துவரும் தங்கதுரையின் இந்தத் தங்கமான மனசுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், நாமும் பாராட்டுகளோடு அவரிடம் பேசினோம். … Read more

இருசக்கர வாகனத் துறையிலும் ஜியோ! ஜியோவின் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல்!

ஆட்டோமொபைல் துறையின் மேம்பாடு, உலகமே கிராமமானதற்கு முக்கியமான காரணம் என்று சொல்வதுண்டு. அதிலும், இந்தத்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளும், புத்தாக்கங்களும் மனித வாழ்க்கையை மேலும் சுலபமாக்குகிறது. தற்போது வாகனத்துறையில் மின்சார வாகனங்கள் தொடர்பாக புத்தாக்கங்கள் அதிக அளவில் இருக்கிறது. தொழில்நுட்ப ஜாம்பவானான ரிலையன்ஸ் ஜியோ தற்போது பைக் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆடி பரிசை வழங்கியுள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ குழுமத்தின் நிறுவனமான ’ஜியோ திங்ஸ் லிமிடெட்’ (JioThings Limited) பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ‘மேட் இன் இந்தியா’ ஸ்மார்ட் … Read more

பாஜக ஆட்சியில் தான் மூடாவில் முறைகேடு : டி கே சிவக்குமார்

பெங்களுரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் பாஜக ஆட்சியில் தான் மூடாவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியுள்ளார். நேற்று பெங்களூர்வில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம், ”மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் தான் இந்த மனைகள் ஒதுக்கப்பட்டன. இதை சட்டசபையில் பா.ஜனதா ஒப்புக்கொண்டு இருக்க வேண்டும். தங்களின் தவறு வெளியே வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். வால்மீகி வளர்ச்சி … Read more

கூடவே வந்து பார்த்தீங்களா.. ஹீரோவுடனான கிசுகிசு.. ’சட்னி சாம்பார்’ நடிகை வாணி போஜன் விளாசல்!

சென்னை: மொழி, அபியும் நானும், மலேசியா டு அம்னீஷியா, பொம்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வாணி போஜன் நடித்துள்ள ‘சட்னி சாம்பார்’ வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது. ஏற்கனவே ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டு அம்னீஷியாவில் நடித்த வாணி போஜன் மீண்டும் அவர் இயக்கத்தில்

US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்… இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?!

வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதகளமாகியிருக்கிறது, அமெரிக்க அரசியல் களம். இதில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம் காண்கிறார். மறுபக்கம் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன்தான் போட்டியில் இருந்தார். இந்த சூழலில்தான் கடந்த 21-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து தான் விலகுவதாக பைடன் அறிவித்தார். வயது முதிர்வு, கொரோனா தொற்று போன்றவற்றால் இந்த முடிவை பைடன் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தனது முடிவு … Read more

நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஆசானாக மாறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடம் நடத்தினார்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புவி வெப்பமடைதலின் தாக்கம், தண்ணீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடங்களை மகிழ்வுடன் நடத்தினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு. கடந்த 2022 ஜூலை 25-ம் தேதி நாட்டின் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பொறுப்பேற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற வரலாற்றைப் படைத்தார். நேற்றுடன் அவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் … Read more

பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசு ஆனது : தமிழச்சி தங்கபாண்டியன்

டெல்லி பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசாக ஆனதாக தென்சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “காழ்ப்புணர்வு, விருப்பு-வெறுப்பு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம் நமக்கு தந்திருக்கிற மக்களாட்சியின் மகத்துவம். ஆனால் அதை மறந்துவிட்டு தமிழகம், தமிழ் என்கிற சொற்களே இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, நான் எனது … Read more

இளையராஜா பயோபிக் படத்துக்காக தீயாக வேலை செய்யும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்! மிரட்டும் புது அப்டேட்!

சென்னை: தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படக்கூடிய இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இசைத்துறையில் இவர் அடைந்த உச்சமும் இசைத்துறையில் இவர் படைத்த சாதனைகளும் இதுவரை யாருமே படைக்கவில்லை எனக் கூறலாம். கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக முகவரியாக இருந்து வருகின்றார் எனலாம். இவருக்காக திரைத்துறையினர் தொடங்கி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வரை விழா எடுத்து

நட்சத்திரப் பலன்கள்: ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி Source link