2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிட சீமான் வலியுறுத்தல்

சென்னை: “தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பணியாணை … Read more

வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் வங்கதேச அரசு மிகச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது. எல்லையை கடந்து வருவதாக இருந்தாலும் சரி, விமான நிலையம் சென்று விமானத்தின் மூலமாக வருவதாக இருந்தாலும் சரி இந்தியர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

தமிழக முதல்வரை சந்தித்த ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் இன்று சந்தித்துள்ளார். அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி சென்னை வந்துள்ளார். அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்றார். கருத்தரங்கில் தொழில்முனைவோர் துறையின் இணை அமைச்சர் ஆலியா பிந்த் அப்துல்லா அல் மஸ்ரூயி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக அரசுக்குழுவினர் கலந்து கொண்டனர். … Read more

அபிமன்யுவின் விண்வெளி சாகசங்களை குழந்தகளுக்கு அறிமுகப்படுத்திய நிக் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா!

சென்னை: குழந்தைகளுக்கு உற்சாகமான கற்றல் அனுபவத்தை உருவாக்க நிக் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் இணைந்துள்ளது. சென்னையில், நிக்கலோடியோனின் 12வது ஹோம்கிரோன் IP ஆன “அபிமன்யு கி ஏலியன் ஃபேமிலி”யில் இருந்து ஏலியன் அபிமன்யுவைச் சந்திப்பதில் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு விண்வெளியின் கண்கவர் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சந்திப்பின்

பேச்சு தோல்வி: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஜூலை 30-ல் திருமங்கலத்தில் ‘பந்த்’

மதுரை: பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி வரும் 30-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ‘பந்த்’ போராட்டம் நடத்தப்போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி செயல்படுகிறது. இந்த சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள், வணிகர்கள் பல்வேறு … Read more

“ஜெகனுக்கு அம்பானியை விட பணக்காரர் ஆக ஆசை!” – ‘டான்’ உடன் ஒப்பிட்டு சந்திரபாபு நாயுடு பேச்சு

அமராவதி: ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டு சட்டப்பேரவையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசை கண்டித்து டெல்லியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று போராட்டம் நடத்தினார். “ஆந்திராவில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. … Read more

டெல்லி முதல்வர் சிகிச்சைக்காக 30 ஆம் தேதி இந்தியா கூட்டணி போராட்டம்

டெல்லி சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி இந்தியா கூட்டணி வரும் 30 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது’ அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் பதின்ந்துள்ள வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்த் அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு … Read more

Kalki 2898 AD: பண மழையில் பிரபாஸ்! ரூபாய் 1100 கோடி வசூலைப் போட்ட கல்கி 2898 ஏ.டி!

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. படம் ரிலீஸான முதல் நாளே ரூபாய் 191.5 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. இதில் முன்பதிவில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய்

இறக்கும் தறுவாயிலும் 20 பிஞ்சுகளின் உயிரைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த மலையப்பன் (49), தனியார் பள்ளி வேன் டிரைவராகவும், அவரின் மனைவி லலிதா அதே வேனில் உதவியாளராகவும் வேலை செய்து வந்தனர். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்து 20 மாணவர்களை பள்ளியிலிருந்து ஏற்றிக்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வேன் வெள்ளக்கோயில் காவல் நிலையம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் மலையப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் பள்ளி வேனை சாலை ஓரமாக … Read more

390 நாட்களுக்கு பிறகு 90 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பிறகு மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு … Read more