கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் விடிய, விடிய தர்ணா

பெங்களூரு, கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வால்மீகி வளர்ச்சி வாரிய நிதி முறைகேடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடா்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு … Read more

பயிற்சியாளர் ஆன பிறகு கம்பீர் மாற்றி பேசுகிறார் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

மும்பை, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றை கைப்பற்றும் முனைப்போடு … Read more

பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு

மணிலா, தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. ‘கெமி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் சின்னா பின்னமானது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை … Read more

RAMIS முறையை திறம்பட பயன்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (RAMIS)-பராமரிப்பு சேவைகளைப் பெறுதல்’ என்ற 24/0696/604/079 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டு … Read more

விகடன் சின்னத்திரை விருதுகள்: “நெகட்டிவ் ரோலுக்காக விருது வாங்குறது இதுதான் முதல் முறை!" – ராணி

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 விருது விழா பிரம்மாண்டமாய் நடந்தேறியது. அந்த நிகழ்வில் `Best Actress – Negative Role’ என்கிற கேட்டகரியில் சன் டிவியில் ஒளிபரப்பான `பாண்டவர் இல்லம்’ தொடருக்காக நடிகை ராணிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகை யுவராணி வழங்கினார். மேடையில் பேசிய யுவராணி, ` ஆடியன்ஸ் எப்படி பாராட்டுவாங்களோ அந்த அளவுக்கு எப்படி திட்டுவாங்கன்னும் பார்த்திருக்கேன். வீட்ல கூட அப்படி திட்டு வாங்கி இருக்க மாட்டேன். சித்தி சீரியல் பண்றப்ப எனக்கு … Read more

ஆதரவற்றோர் ‘வாழ்விடம்’ ஆன ஓசூர் பேருந்து நிலையம் – முதியோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை

ஓசூர்: ஆதரவற்றோருக்கு வாழ்விடமாக ஓசூர் பேருந்து நிலையம் மாறியுள்ளது. கைவிடப்பட்டோர் மற்றும் முதியோர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரமான ஓசூரில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வாடகை வீடுகள் எடுத்துத் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதனால், ஓசூர் பேருந்து நிலையம் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் வருகையால் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். பார்க்கப் பரிதாபம்: இந்நிலையில், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் … Read more

புனே மாவட்டத்தில் கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம்: 4 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை பாதிப்பு சம்பவங்களால் 4 பேர் உயிரிழந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய வானிலை ஆய்வு மையம், புனே மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் … Read more

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலா? அமைச்சர் மா சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு கேரளா இடைபட்ட ஐந்து இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை நிபா வைரஸ்வாதிப்பு யாருக்கும் இல்லை – அமைச்சர் மா சுப்பிரமணியன்  

Nayanthara: மம்முட்டி, மாதவன், யஷ் என அசத்தலான பட லைன்அப்களில் நயன்தாரா!

பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்திற்கு பின், இந்திக்கு செல்லாமல் மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. ஹீரோயின் சென்ட்ரிக்காக சில படங்கள், ஹீரோக்களுடன் சில படங்கள் என இந்தாண்டு அசத்தல் படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்போது தயாரிப்பாளராகவும் இருப்பதால், நடிப்பிற்கிடையே கூடுதல் பொறுப்புகளுடன் புன்னகைக்கிறார். ஸ்டைல் போஸ்.. `லப்பர் பந்து’, `மிஸ்டர் எக்ஸ்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டூட் விக்கியின் டைரக்‌ஷனில் ‘மண்ணாங்கட்டி since 1960’ என்ற … Read more

இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்… பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு…

இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் வரி அனுமதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவை விட்டு வெளியேறத் தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது. அக்டோபர் 1 முதல், இந்தியர்கள் அனைவரும் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அவர்களின் கணக்கு தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்தும் அனுமதிச் சான்றிதழ் பெறவேண்டும். வருமான வரி (ஐ-டி) சட்டப் பிரிவு 230 இன் படி, இந்தியாவில் வசிக்கும் எவரும் நாட்டை விட்டு … Read more