உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்

லண்டன், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ‘ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் … Read more

அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலொண்ணறுவை, கேகாலை மற்றும் இரத்திணபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கே இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அந்த மாவட்டங்களில் வெள்ளம், மண் சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக … Read more

கழுகார்: `நயினாருக்கு வந்த டெல்லி உத்தரவு’ டு `அதிமுக தென்மாவட்டப் புள்ளிகளின் அதீத விசுவாசம்’

எடப்பாடியின் அதிரடி முடிவு காரணமா?தென்மாவட்டப் புள்ளிகளின் அதீத விசுவாசம்! ‘சசிகலா, ஓ.பி.எஸ் போன்றவர்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைத்தால்தான் தென்மாவட்டத்தில் வெற்றிபெற முடியும்’ என்று சீனியர்கள் சிலர், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இதில் உடன்பாடு இல்லாத எடப்பாடி, ‘தென்மாவட்டங்களில் அமைப்புரீதியாகச் சில மாற்றங்களைச் செய்தாலே சரிவிலிருந்து மீண்டுவிடலாம்’ என்று நம்புகிறாராம். அதன்படி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என அமைப்புரீதியில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதிமுக – எடப்பாடி … Read more

‘பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு’ – மத்திய அரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 27-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை விடுத்த அறிவிப்பில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். ஆனால் … Read more

நிதி ஆயோக் கூட்டம் | பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புறக்கணிப்பு – ஆம் ஆத்மி அறிவிப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு … Read more

‘ஒன்றும் புரியவில்லை’ – அதிபர் பைடன் உரையை சாடிய ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதனை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்தது. “பைடனின் உரையில் பெரிதாக ஒன்றும் புரியவில்லை. சிலவற்றை தான் புரிந்துகொள்ள முடிந்தது. அது மிகவும் மோசமாக இருந்தது. பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்காவுக்கு சங்கடம் தருகின்றனர். இது போல ஒரு போதும் … Read more

Agaram: "நான்தான் அகரம்; அகரம்தான் நான்" – மாணவியின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்த நடிகர் சூர்யா!

நடிகர் சிவக்குமாருடைய கல்வி அறக்கட்டளையின் 45வது ஆண்டு விழா சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. வருடந்தோறும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பில் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டும் பல மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர்களும் சிவக்குமாரின் மகன்களுமான சூர்யாவும் கார்த்தியும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, “1980-ல இருந்து இது மாதிரியான விருதுகளை மாணவர்களுக்கு அப்பா கொடுத்துட்டு இருக்கார். அகரம் அறக்கட்டளையும் தொடங்கி 25 வருடம் ஆகப் … Read more

கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுகே! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு…

டெல்லி: கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் அந்த  மாநிலங்களுக்குத்தான் உண்டு என்று மாநிலங்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 8:1 பெரும்பான்மையுடன் அரசியலமைப்பின் கீழ் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. பிரித்தெடுக்கப்படும் கனிமங்களுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி வரி இல்லை என்று உச்ச நீதிமன்றம் … Read more

அத்தனை பேர் மத்தியில் அந்த மாதிரியான காட்சிகள்.. ஓபனாக பேசிய அஞ்சலி

சென்னை: நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் அவர்

இடஒதுக்கீடு பிரிவில் 1,200 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக நியமனம் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ்., ஆகியவற்றுக்கான ஆட்சேர்ப்பு சம்பந்தப்பட்ட விதிகளின்படி மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி) மூலம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள அறிவுறுத்தல்களின்படி இந்த பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 15 சதவீதம், 7.5 சதவீதம் மற்றும் 27 சதவீதம் என்ற விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த … Read more