மைக்ரோசாப்ட் ஊழியர் எனக்கூறி அமெரிக்க பெண்ணிடம் பணமோசடி செய்த இந்தியர் கைது

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணின் கணினியை கடந்த ஆண்டு ஜூலை 4-ந்தேதி மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்னர் அந்த கணினியில் தோன்றிய அலைபேசி எண்ணிற்கு லிசா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், தன்னை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த நபர் லிசாவிடம் அவரது வங்கி கணக்கி இருந்து 4 லட்சம் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.3.3 கோடி) பணத்தை … Read more

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது என்று இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இலக்கம் JC 23, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கிவரும் பிராந்திய … Read more

முதல்முறை வேலை… மத்திய அரசு அறிவித்துள்ள `ரூ.15,000’ – பட்ஜெட் சொல்வது என்ன?!

மத்தியில் பா.ஜ.க தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிகாரத்துக்கு வந்த பிறகு, மத்திய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் தொடர்பான திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நிர்மலா சீதாராமன் முதன்முறையாக வேலையில் சேரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு முதல் மாத சம்பளமாக அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்பது முன்னுரிமைத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் … Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், … Read more

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளிருப்புப் போராட்டம்: சித்தராமையாவுக்கு நெருக்கடி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் நேற்று (புதன்கிழமை) இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (MUDA) ஊழல் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏ.,க்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ.,க்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ.,க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளிருப்புப் … Read more

ட்ரம்பை கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியுமா? – ஒபாமா அப்செட்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதில் அமைதி காத்து வருகிறார். இது குறித்து பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என … Read more

காதலியுடன் அர்ஜுன் தாஸ்! இது ‘அந்த’ நடிகையா? வைரலாகும் போட்டோ..

Latest News Arjun Das Instagram Story With His GirlFriend : தமிழ் திரைப்பட நடிகரான அர்ஜுன் தாஸ், ஒரு பெண்ணின் தோள் மீது கைப்போட்டபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.   

IND vs SL: இந்தியா vs இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!

India vs Sri Lanka: இந்தியா மற்றும் இலங்கை அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும். எனவே வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்களுக்கு மாற்றாக இளம் … Read more

ஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!

சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது, அவற்றின் செல்லுபடியாகும் காலம் மிக நீண்டது. 300 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் 3 திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நிறைய அழைப்பு நிமிடங்கள் மற்றும் டேட்டாவைப் கொடுக்கும் இந்தத் திட்டங்கள், பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானவை. 365 நாட்களுக்கு ‘எல்லாம் இலவசம்’ என்ற ஓராண்டு விடுப்பு திட்டத்தை பிஎஸ்என்எல் கொண்டு வந்ததை அடுத்து, ஜியோ பயனர்கள் கவலைப்படுவார்கள். ஏனென்றால், இப்போது மற்ற மொபைல் நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் விலையை அதிகரித்துள்ளன, இதனை … Read more

நாளை தொடங்குகிறது பாரிஸ் ஒலிம்பிக் 2024 – வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பாரிஸ் நகரம்… ரசிகர்கள் உற்சாகம்….

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை  (ஜுலை 26) ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ளதார், பாரிஸ் நகரம் உள்பட நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாரிஸ் நகரம் வண்ணக்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலி ஜொலிப்புடன் காணப்படுகிறது. நாட்டு மக்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் பாரிஸ் நகரம் வந்துகொண்டிருப்பதால் நகரமே விழாக்கோலமாக .  காணப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக  இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய … Read more