வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. அட இங்கேயும் விஜய்யா?.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய படமாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு எதிரான அத்தனை திணிப்புகளையும் பற்றி இந்த படம் பேசுகிறது என நைஸாக அந்த சர்ச்சையில் இருந்து கழண்டுக் கொள்ளும் விதமாகவே தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்

"மோசடி புகாருக்கான ஆதாரம் செந்தில் பாலாஜி வீட்டில் கிடைத்ததா?'- சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

புதுடெல்லி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, செந்தில் … Read more

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிக்க நடவடிக்கை…

பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிறுவனங்களுக்கு முன்வைப்பதாகவும், அதற்கான மதிப்பீட்டை தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். பாடசாலைகளில் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் தரத்தை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நேற்று (24) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண முன் வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more

`நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' – பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் பேசுபொருளாக இருக்கும் மாநிலம் பீகார். அந்த பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், அவ்வப்போது பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் கூறி பின்னர் மன்னிப்பும் கேட்பார். கடந்த ஆண்டு கூட, `பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கணவரை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்’ என்று சட்டமன்றத்திலேயே கூறியிருந்தார். நிதிஷ் குமார் அப்போது, … Read more

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்ட அமீரக அமைச்சர்

சென்னை: அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார். ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை வந்த அவர் தொழில்துறை முதலீடுகள் தொடர்பாக நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘நடப்போம் நலம் … Read more

மும்பையில் ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் சேதத்தை பார்வையிட்டார் கடற்படை தளபதி

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா. 3,850 டன் எடையுள்ள இந்தக் கப்பல்கடந்த 2000-வது ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. பழுதுபார்க்கும் பணிக்காக மும்பை கடற்படைதளத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பழுதுபார்க்கும் பணியின் போது இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டனர். அதன்பின்பு கப்பலில் மீண்டும் தீ பரவாமல் இருப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் கடற்படை … Read more

ஜனநாயகத்தை காக்கவே அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினேன்: பைடன் விளக்கம்

வாஷிங்டன்: கடந்த 21-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர் விளக்கியுள்ளார். “ஜனநாயகத்தை பாதுகாப்பது அனைத்தையும் விட முக்கியமானது. அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அதில் தனிப்பட்ட காரணமும் அடங்கும். நான் இந்த பொறுப்பை மதிக்கிறேன். அதை விட தேசத்தை அதிகம் நேசிக்கிறேன். இதன் மூலம் … Read more

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த தென்மாவட்ட எம்பிக்கள்!

டெல்லி: மதுரை விமான நிலைய கோரிக்கைகள் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுடன் தென்மாவட்ட எம்பிக்கள் சந்தித்து  மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி மனு கொடுத்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், துறைவாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் உரியதே என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.  இந்த நிலையில்,மத்திய பட்ஜெட் 2024ல்  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு … Read more

திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அதிரடியாக பணியிடை நீக்கம்.. விழுப்புரம் டிஐஜி உத்தரவின் பின்னணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மகேஸ்வரி என்பவர் புகார் கொடுக்க வருபவர்களை தரக்குறைவாக பேசிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி புகார் கொடுக்க Source Link

வடிவேலுவுடனான படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்! சிம்புதேவன் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இருந்தாலும், படம் முழுக்க வைக்கப்பட்டிருந்த குறியீடுகள் மற்றும் வசனங்கள்