நாளை (26) முதல் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்… 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 25ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.   மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என … Read more

ராஜபாளையம்: சொத்து பிரச்னை… முன்னாள் ராணுவ வீரரை ட்ராக்டர் வைத்து மோதி, வெட்டிக்கொன்ற கும்பல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன்னாள் ராணுவ வீரரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, “ராஜபாளையம் அடுத்த குருச்சியார்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(வயது 36). கடந்த சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றியபோது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொன்னுச்சாமி பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பொன்னுசாமி இதனைத்தொடர்ந்து சொந்த ஊரில் வசித்து வந்த பொன்னுச்சாமி, வேலைக்கு செல்லாமல் … Read more

சென்னை | பேருந்து கூரையில் ஏறி பள்ளி மாணவர்கள் ஆட்டம்:  போலீஸார் விசாரணை

சென்னை: ‘பஸ்டே’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை மடக்கி, அந்த பேருந்தை அலங்கரித்து, அதில் சாலை வழியாக மெதுவாக பயணித்து கல்லூரியை சென்றடைவார்கள். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானதையடுத்து ‘பஸ்டே’வுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வேப்பேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததோடு, பேருந்தின் மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்டுள்ளனர். மேலும், தங்களது புத்தகப்பையை பேருந்தின் மேற்கூரை நோக்கி தூக்கி வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை … Read more

பிஹாரில் வினாத்தாளை கசியவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

பாட்னா: வினாத்தாளை கசியவிட்டால் ரூ.10லட்சம் அபராதம், 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் மசோதாபிஹார் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மசோதாவை பிஹார் மாநில பேரவை விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புசெய்தன. அதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெறும் நீட்உள்ளிட்ட தேர்வுகள், மாநிலங்களில் அமைந்துள்ள கல்லூரிகளில் சேர உதவும் தேர்வுகள், போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க … Read more

"கல்யாணத்துக்காக பொண்ணு தேடுறேன்; வரதட்சணையே வேணாம்!" – அப்புக்குட்டி பேட்டி

மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ பட டீசர் மூலம் ஹீரோவாக டைம் லைனுக்கு வந்திருக்கிறார் நடிகர் அப்புக்குட்டி. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்து ‘சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது’ பெற்ற நடிப்புக்குட்டி இவர். சமீபத்தில் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் டீசரில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் சூழலில் கள்ளச்சாராய சாவு மையப்படுத்திய வசனங்கள் இடம்பிடித்து கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ‘ஜீவ காருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்துவரும் அப்புக்குட்டியிடம் … Read more

சட்டசபையில்  விடிய விடிய தர்ணா நடத்திய கர்நாடகா எதிர்க்கட்சி எம் எல் ஏ  க்கள்

பெங்களூரு நேற்று இரவு முதல் எதிர்க்கட்சி எம் எல் ஏ க்கள் கர்நாடக சட்டசபையில் விடிய விடிய தர்ணா நடத்தி உள்ளனர். கடந்த 15-ந் தேதி தொடங்கியகர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின்ன். முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு வால்மீகி வளர்ச்சி வாரிய நிதி முறைகேடு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தொடரின் 7-வது நாளான நேற்று காலை. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், … Read more

LIC டைட்டில் சிக்கல்.. பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளில் வெளியான புதிய டைட்டில்.. அட இதுதானா?

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் கடுமையாக உழைத்து அந்த படத்தையும் வெற்றிப்படமாக மாற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். அவரது 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன்

நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: பாஜக துணை தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ராகுல் காந்திக்கு 15 ஆண்டுகள் ஆட்சியை இழந்துவிட்ட விரக்தியும், பாஜக மீதான வெறுப்பும், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த மக்களின் மீதான கோபமாக மாறியுள்ளது. “நாடாளுமன்றத்தில் உள்ள என் அலுவலகத்துக்கு விவசாயிகளை அழைத்தேன். ஆனால், அவர்களை அனுமதிக்கவில்லை” என்று ராகுல் காந்தி கூறியிருப்பது, நாட்டை துண்டாட யாரை வேண்டுமானாலும் தூண்டிவிட தயார் என்பதையே உணர்த்துகிறது. சாதி, மத, மொழி ரீதியாக இந்த தேசத்தை துண்டாட தயாராகி … Read more

நீட் வழக்கு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு இடையூறு செய்த மூத்த வழக்கறிஞரை அறையில் இருந்து வெளியேற்றும்படி காவலர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் விசாரித்துக் கொண்டிருந்தார். மனுதாரர்களில் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜராகி வாதிடும்போது, மற்றொரு மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, ஹூடா தனது வாதத்தை … Read more

புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3-வதுஇடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இது தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்றஅறிவியல் இதழில் வெளியாகிஉள்ளது. அதில் கூறியிருப்பதாவது: புதன் கிரகத்தில் மேற்பரப்பில்கார்பன், … Read more