இன்று பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

சென்னை இன்று பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கக்கனசிறப்பு பிரிவு கலந்தாய்வூ தொடங்குகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. கடந்த 22 ஆம் தேதி இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. இதில்  முதல்கட்டமாக, அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு … Read more

புறநானூறு படத்துக்கு என்னதான் ஆச்சு?.. சுதா கொங்கரா சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இயக்குநர் சுதா கொங்கரா

விருப்பு, வெறுப்புடன் அரசை நடத்தாதீர்கள்: பிரதமர் மோடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியில் பாஜக கடந்த 2014-ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை … Read more

மரபணு மாற்றப்பட்ட கடுகு பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

புதுடெல்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகு களப் பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் தீபக் பென்டல் மரபணுமாற்றப்பட்ட கடுகை உருவாக்கினார். அதிக மகசூல் தரும் இதை பயிரிட்டால் சமையல் எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில், டிஎம்எச்-11 … Read more

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது

காத்மாண்டு: நேபாளத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 19 பயணிகளுடன் நேற்று காலை பொக்காரா நகருக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் வேகமாக சென்று மேலே … Read more

தனுஷ் இயக்கப்போகும் நான்காவது படத்தில் நடிப்பது இவர்களா?.. செமயா இருக்குமே

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகிறது. இந்தச்

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 2025 பிப்ரவரிக்குள் 20 ‘டீன்’கள் ஒய்வு?

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ நியமனம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறதா என்று மருத்துவத் துறை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 20 டீன்கள் ஒய்வு பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘டீன்’ ஆக ரெத்தினவேலு இருந்து வந்தார். அவர், கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஒய்வு பெற்றார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாக கூறி புதிய ‘டீன்’ உடனடியாக நியமிக்கப்படவில்லை. … Read more

கார் பானட்டில் ஸ்பைடர்மேன் உடையில் ஆபத்தான பயணம்: வைரல் வீடியோவால் டெல்லி இளைஞர் கைது

புதுடெல்லி: டெல்லியில் ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து கார் பானட்டில் அமர்ந்து சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து டெல்லி போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் டெல்லியின் துவாரகா பகுதியில் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து கார் பானட்டின் மேல் அமர்ந்து சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில், தாறுமாறாக வாகனம் … Read more

தங்கலான் படப்பிடிப்புக்கு மத்தியில் 5 மருத்துவர்களைச் சந்தித்த மாளவிகா மோகனன்! காரணம் என்ன?

சென்னை: நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். விக்ரம் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படங்களில் ஒன்றாக இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம்

ஜயகமு ஸ்ரீலங்கா பல்வேறு சேவைகளுடன் காலிக்கு விஜயம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் காலி மாவட்ட நிகழ்வு இன்றும் (24 ) நாளையும் (25) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன. குறிப்பாக : புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுவூட்டும் ‘ஹரசர திட்டம்’ புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் விநியோகம் பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு … Read more