இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீசி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 18 பயிற்சி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி கொழும்பு 07 ஹெக்டர் கொப்பேவடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024 ஜூலை 22 முதல் 24 வரை நடாத்தப்பட்டது.
வினைத்திறன் மிக்க தொழில்வாய்ப்பிற்கான பயிற்சி அதிகாரிகளின் திறன்கள் மற்றும் இயலுமைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதில் ஊக்கமளித்தல், சமூக மற்றும் உணவறைமுறைகள், நேர முகாமைத்துவம், மன அழுத்த முகாமைத்துவம், தலைமைத்துவம் மற்றும் வெளிகள பயிற்சி,குழுச்செயற்பாடு மற்றும் விமர்சனசிந்தனை ஆகிய திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும் பயிற்சியாளர்கள் சம்பவ அடிப்படையிலான கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் பங்கேற்பாளர்கள் யதார்த்தமான சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பெறும் ஒரு சூழலை உருவாக்கினர். இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் இந்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.