IND vs SL ODI Playing XI Prediction: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகளை விளையாடியது. அதில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரையே வெற்றிகரமாக தொடங்கியிருப்பதால், இந்திய அணி பெரும் குதூகலத்தில் உள்ளது.
அந்த குதூகலத்துடன் அதே கௌதம் கம்பீர் பொறுப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை விளையாட உள்ளன. ஆக. 2, 4, 7 ஆகிய தேதிகளில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கின்றன. டி20ஐ போல் இதையும் வைட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது.
IND vs SL ODI: எங்கு, எப்போது பார்க்கலாம்?
டி20 தொடர் முழுவதுமாக பல்லேகலேவில் நடைபெற்ற நிலையில், ஓடிஐ தொடர் முழுவதும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியும் தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வார்க்கிலும், சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலையில் காணலாம். இருப்பினும் ஓடிஐ போட்டி இந்திய நேரப்படி போட்டி நடைபெறும் அன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.
ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடுவதை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ஓடிஐ அணிக்கு திரும்பி உள்ளனர். டி20 அணியில் இடம்பெற்றிருந்த ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஓடிஐ அணியில் இடம்பெறவில்லை.
July 31, 2024
கேஎல் ராகுல் உறுதி
மேலும், தூபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோருக்கும் ஓடிஐ தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுளளது. நாளைய போட்டியின் பிளேயிங் லெவனை எதிர்பார்த்தும் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஓப்பனிங்கில் ரோஹித் சர்மா – சுப்மான் கில் இறங்குவது உறுதி. 3ஆவது இடத்தில் கிங் கோலிதான். 4ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார். 5ஆவது இடத்தில் கேஎல் ராகுல் வருவார் என்பது உறுதி. ஏனென்றால், ஓடிஐ அரங்கில் ராகுல் தொடர்ந்து 5ஆவது இடத்தில் மிரட்டி வருகிறார்.
அறிமுகமாகும் ஹர்ஷித் ராணா…
ரிஷப் பண்ட் வெளியே அமரவைக்கப்படலாம். ஆறாவது இடத்தில் ரியான் பராக் அல்லது தூபே ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். பந்துவீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது ஆகியோர் ஓடிஐ அணியிலும் பேக்-அப் வீரர்கள்தான்.
ஆறாவது பந்துவீச்சு ஆப்ஷன் தேவைப்படும்பட்சத்தில் ஆடுகளத்திற்கு ஏற்ப வேகப்பந்துவீச்சுக்கு தூபேவும், சுழற்பந்துவீச்சுக்கு ரியான் பராக்கும் களமிறக்கப்படுவார்கள். ஒருவேளை தேவையில்லாதபட்சத்தில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இறங்கி, கேஎல் ராகுல் பீல்டிங்கில் செல்லலாம். தூபே – பராக் அமரவைக்கப்படலாம்.
இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு
ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், தூபே/பராக், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், சிராஜ், ஹர்ஷித் ராணா.
மேலும் படிக்க | இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்!