தஞ்சாவூர் மாவட்டம், கொரநாட்டுக்கருப்பூர், சுந்தரேஸ்வரர் ஆலயம் ஞானோபதேசம் பெற விரும்பிய பிரம்மன், எமலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு உபதேசம் பெற்ற இடமே திருப்பாடலவனம் எனப்படும் கொரநாட்டுக் கருப்பூர். கண்வர் போன்ற மகரிஷிகளும், குபேரன் மற்றும் இந்திரன் ஆகிய தேவர்களும் வழிபட்ட தலம். எப்போதும் பெட்டகத்தினுள்ளேயே இருக்கிறாள் காளி. இடுப்புக்கு மேலுள்ள உருவத்தை மட்டுமே காண முடியும். எட்டுக் கரங்களுடன் சிறிய கோரைப் பற்களும், அனல் தெறிக்கும் விழிகளுடனும் அன்னை காட்சி தருகிறாள். எனினும், கருணையே வடிவானவள். வலக்கரங்களில் சூலம், உடுக்கை, […]