மயிலாடுதுறை: பாமக நிர்வாகி கொலை தொடர்பாக தஞ்சை, மயிலாடுதுறையில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதமாற்றம் செய்வதை அவர் கண்டித்ததாகவும், அதில் ஏற்பட்ட விரோதத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]
