தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது சீசன் களைக்கட்டி வருகிறது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும் சீசனானது செப்டம்பர், அக்டோபர் வரையிலும் நீடிக்கும். இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குற்றால அருவிகளில் அதிக நீர் வரத்தின் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பேரருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த சுற்றுலா பயணிகள், அருகே உள்ள குண்டாறு, பாலருவி, தென்மலை, பாபநாசம் மற்றும் தனியார் நீர்வீழ்ச்சிகளை நோக்கி படையெடுத்து சென்றனர். இந்நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு அருவிகளில் நீர்வரத்து குறைந்து இதமான சீதோஷ்னநிலை நிலவியதால் பேரருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்தனர். அதேபோல சிற்றுவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று மாலை, குற்றாலம்-ஐந்தருவி செல்லும் சாலையில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட் அருகே வனப்பகுதியில் இருந்து திடீரென காட்டுயானை கீழே இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இதுகுறித்த தகவல், வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், வெடி, வெடித்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்பு யானை காட்டுக்குள் சென்றது. தொடர்ந்து, பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் கார் பார்க்கிங் அடுத்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88