ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. மிசுகோஷி ஹிடேகி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி 1001 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடையாகும். ஜப்பானிய கட்டிடக்கலைப்படி கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, அப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாகவும் அறியப்பட்டது. அப்போது இதன் மதிப்பு 850 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது மருத்துவமனையின் மொத்த ஊழியர்கள் 1800 பேர் பேர் சேவை புரிகின்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், தோல் அழகு சிகிச்சை நிலையம் மற்றும் தோல் லேசர் மையம் ஒன்றும ஆரம்பித்து வைக்கபட்டது.
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சலுகை விலையில் ஹீமோடையாலிசிஸ் சேவைகளை வழங்கும் வைத்தியசாலையில் பெண்ணோயியல் மற்றும் இரத்தப் பரிசோதனைப் பிரிவு என்பன சுகாதாரத்துறை அமைச்சரால் கண்காணிக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இவ்வாறு தெரிவித்தார்….
இந்த வைத்தியசாலை உட்பட இலங்கையின் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஜப்பானிய அரசாங்கம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக நினைவுகூரப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்திற்கும், ஜப்பானிய மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். இலங்கையின் ஆரம்ப சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்கு ஜப்பானிய அரசாங்கம் நேரடியாகப் பங்களிப்பதாக வலியுறுத்திய அமைச்சர், 383 மில்லியன் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட லொறிகள் மற்றும் கெப் வண்டிகளை அன்பளிப்பாக வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
புதிய சிகிச்சை சேவைகளை ஆரம்பித்து வைப்பதற்கும், கட்டணத்தின் கீழ் வழங்கப்படும் விசேட வைத்திய சேவைகளை மாலையில் வழங்குவதற்கும் தேவையான அறிவுறுத்தல்களையும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதன்போது, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்களான டொக்டர் சுனில் டி அல்விஸ், சுனில் கலகம, பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லால் பனாபிட்டிய, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் டொக்டர் சாரங்க அழகப்பெரும, பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி. ஹெவகே, வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.