பி வி சிந்து அதிர்ச்சி தோல்வி!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் ரவுண்டு ஆப் 16 சுற்றில் சீனாவின் ஹீ பிங்ஜியாவ்விடம் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார் பி வி சிந்து.
லக்ஷயா சென் வெற்றி!
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீரர்களான பிரணாயும் லக்ஷா சென்னுமே நேருக்கு நேராக மோதியிருந்தனர். இதில் லக்ஷயா சென் 21-12, 21-6 என நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி!
இந்திய இணை அதிர்ச்சி தோல்வி!
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி மலேசிய இணைக்கு எதிராக போராடி அதிர்ச்சி தோல்வி.
இந்திய இணை முன்னிலை!
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் – சிராஜ் ஷெட்டி மலேசிய இணைக்கு எதிராக முதல் செட்டை 21-13 என வென்றிருக்கிறது.
பேட்மிண்டன் காலிறுதி!
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை மலேசிய இணையை இன்னும் சில நிமிடங்களில் எதிர்கொள்கிறது.
ஹாக்கியில் தோல்வி!
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் க்ரூப் சுற்றில் இந்திய ஹாக்கி அணி பெல்ஜியமிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி. இந்திய அணி ஏற்கனவே காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தோனிதான் இன்ஸ்பிரேஷன்!
துப்பாக்கிச்சுடுதலில் எந்த வீரரையும் நான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதில்லை. அதைக்கடந்து தோனிதான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். நானும் ஒரு டிக்கெட் கலெக்டர். அதனால் அவருடைய பயணத்தை என்னோடு ஒப்புமைப்படுத்திக் கொள்ள முடியும். இந்த விளையாட்டுக்கு தேவையான அமைதியையும் பொறுமையையும் அவரிடம் கற்றுக்கொள்கிறேன்.
– ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில்
குத்துச்சண்டையில் ஏமாற்றம்!
குத்துச்சண்டை 50 கிலோ பிரிவில் பதக்கம் வெல்வார் என பெரிதும் நம்பப்பட்ட இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் சீன வீராங்கனை வூ யூவுக்கு எதிராக 0-5 என அதிர்ச்சி தோல்வி.
இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!
துப்பாக்கிச்சுடுதலின் 50 மீ 3 பொசிஷன் பிரிவின் இறுதிப்போட்டியில் 451.4 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ஸ்வப்னில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மூன்றாமிடத்தில் ஸ்வப்னில்!
துப்பாக்கிச்சுடுதல் 50 மீ 3 பொசிஷன் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் மூன்றாமிடத்துக்கு முன்னேற்றம்!
வெல்வாரா ஸ்வப்னில்?
50 மீ 3 பொசிஷன் இறுதிப்போட்டியில் ஸ்வப்னில் தொடர்ந்து 5 வது இடத்தில் நீடித்து வருகிறார்.
ஹாக்கி ஆட்டம் தொடக்கம்!
ஹாக்கியில் க்ரூப் சுற்றில் இந்திய அணி இப்போது வலுவான பெல்ஜியம் அணியை எதிர்த்து போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது.
இறுதிப்போட்டியில் பின்னடைவு!
துப்பாக்கிச்சுடுதலில் 50 மீ 3 பொசிஷன் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் இப்போதைக்கு 5 வது இடத்தில் நீடித்து வருகிறார்.
எப்படி வந்தார் இறுதிப்போட்டிக்கு?
50 மீ 3 பொசிஷன் பிரிவின் தகுதிச்சுற்றில் ஸ்வப்னில் 590 புள்ளிகளுடன் 38 முறை சரியாக மைய இலக்கை துளைத்து 7 ஆம் இடம்பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வெல்வாரா ஸ்வப்னில்?
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கிச்சுடுதலில் 50 மீ 3 பொசிஷன் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்கவிருக்கிறார்.
பதக்கப் பட்டியல்
ஐந்தாம் நாள் முடிவில் பதக்கப் பட்டியலில் 33-வது இடத்தில் இந்தியா!
போட்டிகளின் அட்டவணை
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை.