டெலிகாம் துறையில் வெற்றிகரமாக மீண்டும் களமிறங்கும் டாடா நிறுவனத்தின் ஒரு சிறிய முயற்சி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது மக்களின் விருப்பத்தை அதிகரித்தது. அதன் பின்னணியில் இருப்பது டாடா தான். புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்கத் தொடங்கிவிட்டனர். இதன் முதல் அடியாக, 13 மாதம் வேலிடிடி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களைத் தொடங்கியது.
டாடா நிறுவனம், பிஎஸ்என்எல்-இல் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால், இனிமேல் நெட்வொர்க் ராக்கெட் வேகத்தில் கிடைக்கும். தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், பிஎஸ்என்எல் மட்டும் 3ஜியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 4ஜி சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், டாடாவுடனான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒப்பந்தம், மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அதேபோல, டாடா இப்போது பிஎஸ்என்எல் உடன் இணைந்து, தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் அதிரடியாய் தனது இடத்தை பிடிக்கவிருக்கிறது. அரசு தொலைதொடர்பு நிறுவனத்தை, தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் மேம்படுத்த இந்த திடீர் கூட்டாண்மை உதவும் என்பதால் இந்த ஒப்பந்தம் உதவும்.
பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவந்த பிஎஸ்என்எல், நஷ்டத்தை குறைத்துக் கொண்டு, முன்னேற்றத்தின் பாதையில் செல்லும் நிலையில், டாடாவுடனான ஒப்பந்தம், மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு என, இனிமேல், பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனங்களில் முதலிடமாக மாறும் காலம் வெகுதூரமில்லை.
டாடா-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்
குறைந்த ரீசார்ஜில் மக்களுக்கு அதிகமாக பலன்களை வழங்கிய டாடா இண்டிகாம் சேவை இப்போது நினைவில் மட்டுமே இருக்கும். ஆனால், டாடா இப்போது பிஎஸ்என்எல் உடன் இணைந்து, தொலைத்தொடர்பு துறையில் மீண்டும் வருவதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு
சமீபத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பிஎஸ்என்எல்லில் ரூ.15,000 கோடி பெரிய முதலீட்டை செய்திருந்தாலும், இதன் எதிரொலி நான்கு முக்கிய பகுதிகளில் பெரும் முன்னேற்றத்தை கொண்டு வரும்.
கிராமங்களில் அதிவேக இணையம்
கிராமங்களுக்கு வேகமான இணையத்தை வழங்கும் முயற்சியில் BSNL மற்றும் Tata இடையேயான கூட்டாண்மை உதவும். இத்திட்டத்தின்படி, பிஎஸ்என்எல் ஏற்கனவே 4ஜி சோதனையை தொடங்கியுள்ள 1000 கிராமங்களில் வேகமான இணைய வசதி வழங்கப்படும். சென்னை போன்ற நகரங்களைத் தவிர, கிராமப்புறப் பகுதிகளில் இணைய வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது.
இதற்கு மத்தியில், டாடா பிஎஸ்என்எல் நிறுவனத்தை வாங்கப்போவதாகவும், ஏன் வாங்கியே விட்டதாக வதந்திகள் பரவியது. உண்மை என்னவென்றால், டாடா பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கணிசமான முதலீட்டை செய்துள்ளது, பொதுத்துறை நிறுவனத்தை வாங்கவில்லை.
இதன் பின்னணியில் இருப்பது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தனியார் நிறுவனங்கள் அதிரடியாக ஜூலை தொடக்கத்தில் அதிகரித்தன. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன, இது மொபைலுக்காக மக்கள் செய்யும் செலவை கணிசமாக அதிகரித்தது.
விலை உயர்வின் நேரடி தாக்கத்தை ஏற்படுத்திய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைகளில் இருந்து பிஎஸ்என்எல் வழங்கும் சேவைக்கு போர்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம், BSNL இப்போது 5G நெட்வொர்க்கில் அடியெடுத்து வைக்கத் தயாராகி வருகிறது, இதன் சோதனைகள் விரைவில் பெரிய நகரங்களில் தொடங்கப் போகின்றன. அத்துடன் டாடா மற்றும் BSNL இன் கூட்டாண்மை தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.