ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்

India vs Srilanka first ODI Match Updates : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்த நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 3-0 என வெற்றி பெற்று அசத்தியது. அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் போட்டியிலும் இன்று களமிறங்கியுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் நீக்கம்

டி20 உலகக்கோப்பை தொடரின்போதே ரிஷப்பந்த் இந்திய அணயில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ரோகித் சர்மா அது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடி இருக்க வேண்டிய இடம் ரோகித் சர்மாவின் பேவரிட்சம் காரணமாக இருவரின் வாய்ப்பும் பறிபோனது. காரணம், இந்திய அணிக்காக 75க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரிஷப் பந்த் வெறும் 21 சராசரி என்ற அடிப்படையில் மட்டுமே ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்டைக்ரேட் 121. இது மகாமட்டமான ஸ்டைக்ரேட் என்பதால் அவருக்கு இடம் கொடுக்க வேண்டாம் என விமர்சகர்கள் கூறினர்.

இலங்கை தொடரில் சேர்ப்பு

ஆனால் இது இந்திய தேர்வுக்குழுவுக்கும், கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவின் காதுகளுக்கும் எட்டவில்லை. ஆனால், கவுதம் கம்பீரின் என்ட்ரிக்குப் பிறகு ரிஷப் பன்ட் இடம் இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. அவருடைய இடத்துக்கு கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடித்திருந்தாலும், பிளேயிங் லெவனில் அவருக்கான வாய்ப்பு இப்போது குறைந்திருக்கிறது. டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

கே.எல்.ராகுல் சேர்ப்பு

அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார். ரிஷப் பந்த் வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணிக்குள் வந்ததும் ரிஷப் பந்தின் இடத்தை கவுதம் கம்பீர் கேள்விக்குள்ளாக்குவார் என பேச்சுகள் எழுந்த நிலையில், அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அமைந்திருக்கிறது. இத்தனை நாள் பேவரிட்டிசம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் ஆடி வந்த ரிஷப் பந்த் இனி களத்தில் திறமையை காட்டாமல் நீண்ட நாட்கள் இந்திய அணியில் நிலைத்திருக்க முடியாது என்பதற்கு உதாரணமாகவும் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது போல் சஞ்சு சாம்சனுக்கும் இனி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற குரலும் மீண்டும் உரக்க ஒலிக்க தொடங்கியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.