தென்னை மற்றும் இளநீர் உற்பத்திகளில் பரவிவரும் வெள்ளைப்பூச்சு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள என்கார் சிஸ் கௌடா லோபஇ (Encarcis Guadeloupae) எனும் பெயரிலான மூன்று விசுறிகளை இவ்வருடத்தினுள் பகி;ர்ந்தளிப்பதற்கான பணிகளை தென்னை உற்பத்திச் சபை மேற்கொண்டுள்ளது.
இந்த வருடத்தினுள் தென்னை உற்பத்தியை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக (01) நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
தென்னை உற்பத்திக்கு வெள்ளைப் பூச்சினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் தற்போது சில பிரதேசங்களில் காணப்படுவதாகவும், மேல் மாகாணம் மற்றும் ஏனைய பிரதேசங்கள் சிலவற்றில் மழை காரணமாக இப்பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதாகவும், வெள்ளைப் பூச்சு அதிகமாக மஞ்சள் நிறத்தில் கவர்ந்து தென்னையை விட இளநீர் உற்பத்தியில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
வெள்ளைப் பூச்சியினால் ஏற்படும் பாதிப்பினால் தென்னை அறுவடையில் பாரிய செல்வாக்கைச் செலுத்தியுள்ளதுடன், தற்போது வெள்ளைப் பூச்சியின் பாதிப்பிற்கு உள்ளான தென்னை மற்றும் இளநீர் மரங்கள் 1,051,323இற்கு இச்சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறே கடந்த வருடத்தில் தென்னை உற்பத்தியில் பாரிய குறைவு ஏற்பட்டதுடன் இந்நிலையைத் தவிர்ப்பதற்காக வேப்பை எண்ணை விசுருவதற்காக 700 உபகரணங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர்களைத் தெளிவுபடுத்தும் வேலைத் திட்டம் 3046 தென்னை உற்பத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டினுள் தென்னங்கன்றுகள் இரண்டு மில்லியனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது உற்பத்தியாளர்களுக்கு 08 இலட்சம் தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், 11,401 இளநீர் கன்றுகள் மற்றும் 23,233 இளநீர் விதைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கன்றுகளைப் பெற்றுக் கொள்வதற்காக காய்கள் பதியப்பட்டுள்ளதாவும் தென்னை உற்பத்திச் சபை தெளிவுபடுத்தியது.
வெள்ளைப் பூச்சியிலிருந்து தென்னை உற்பத்தியைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள என்கார் சிஸ் கௌடா லோபஇ (Encarcis Guadeloupae) எனும் பெயரிலான பூச்சி கொல்லியை உற்பத்தியாளர்களுக்கு வழங்குதல் மற்றும் சரியாக தென்னை உற்பத்தியில் பயன்படுத்துதல் தொடர்பாகத் மேலும் அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தென்னை உற்பத்திச் சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.