டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் போன்று, ஸ்மாட்போனும் அத்தியாவசிய பொருளாக ஆகி விட்டது. ஸ்மார்போன் மூலம் கிடைக்கும் வசதிக்கு குறைவில்லை என்றாலும், தனிப்பட்ட தகவல்கள் கசியும் அபாயமும், சைபர் மோசடிக்கு ஆளாகும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
வங்கி அல்லது ஃபின்டெக் செயலிகள்
டிஜிட்டல் பேங்கிங் மற்றும் நிதிச் சேவைகளால், பண பரிவர்த்தனை தொடர்பான பணிகள் எளிதாகிவிட்ட நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் செல்போன்களில் வங்கி அல்லது ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஃபின்டெக் செயலிகளில் பேடிஎம், போன்பே போன்ற செயலிகள் அடக்கம் . இவை உடனடி பணப் பரிமாற்றம் உட்பட பல சேவைகளுக்கு இவை எளிதாக உள்ளது. இருப்பினும், பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசியும் ஆபத்து உள்ளது. வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் பல பிண்டெக் செயலிகள் பயனர்களின் தனிப்பட்ட தரவை தவறாகப் பயன்படுத்துகின்றன என கூறப்படுகிறது.
செயலிகள் போனில் உள்ள பல விஷயங்களை அணுகுவதற்கான அனுமதி
பயனர்கள் தங்கள் மொபைலில் ஏதேனும் செயலியை பதிவிறக்கும் போது, போனில் பதிவாகியுள்ள தொடர்புகள், போட்டோக்கள், ஃபைல்கள், எஸ்எம்எஸ், இருப்பிடம் குறித்த தகவல் மற்றும் மைக்ரோஃபோன் உள்ளிட்ட பல விஷயங்களை அணுகுவதற்கான அனுமதிகள் கேட்கப்படுகின்றன. பயனர்கள் மேலே, குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், அணுகலை வழங்குமாறு அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நோடிபிகேஷன்கள் அனுப்பட்டும். அதோடு ஸ்மார்போனில் (Smartphone) செயலிகளையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருக்கும்.
செயலிகள் கோரும் அனுமதிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை
கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) 339 பின்டெக் (Fintech) மற்றும் வங்கி செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த செயலிகள் கோரும் அனுமதிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. சுமார் 73 சதவீத செயலிகள் பயனர்களின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நான்கில் மூன்று பங்கு செயலிகள் பயனர்களின் போட்டோக்கள், மீடியா கோப்புகள் ஆகியவற்றை அணுகுவதற்கான அனுமதியைக் கோருகின்றன.
பயனர்களின் தனியுரிமை தொடர்பான அதிர்ச்சித் தகவல்
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையில், பயனர்களின் தனியுரிமை தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஃபின்டெக் மற்றும் வங்கி செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களிடமே உள்ளது என சமீபத்திய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. மேலும், 70 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்
செயலிகள் பயனர்களின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்துவரும் நிலையில், பயனர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வங்கிகள் மற்றும் பின்டெக் நிறுவனங்களிடம் இருக்கும். இது தனியுரிமையை மீறும் செயலாகும் . ஃபின்டெக் செயலிகள் அல்லது மொபைல் வாலட்களைப் பயன்படுத்தும் பயனர்கள் மிகவும் முக்கியமான தகவல்களுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் நிலையில், பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.