வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. 4வது நாளான நேற்று அட்டமலா வனப்பகுதியில் சிக்கித் தவித்த பழங்குடி குடும்பம் குறித்து தகவல் வெளியானது. அங்கு விரைந்த வனத்துறையினர் சுமார் 8 மணி நேரம் போராடி 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை மீட்டனர்.
இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மீட்புப் பணியின் 5வது நாளான இன்று மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நிலச்சரிவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, சூச்சிபாறா அருவி அருகே 3 இளைஞர்கள் உயிருடன் சிக்கி தவிப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. முண்டகையில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இளைஞர்கள் இருப்பது கடலோர காவல்படை மூலம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சாளியாறு ஆற்றை கடக்கும்போது அவர்கள் 3 பேரும் இந்த இடத்தில் சிக்கியுள்ளனர். கடந்த 5 நாள்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சலி, ரியாஸ், முசின் ஆகிய 3 பேரும் சாளியாறு ஆற்றை கடந்து, வனப்பகுதி வழியாக சூச்சிபாறா அருவிக்கு அருகில் வந்துள்ளனர்.
அப்போது ஒருநாள் இரவு முழுவதும் பாறைகளில் சிக்கி தொங்கியுள்ளனர். 3 இளைஞர்களும் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சை கொடுத்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88