சென்னை இன்று தமிழகத்தில் 17 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு இன்று 17 ஐ பி எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதிலாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆர்.தினகரன் சிலை கடத்தல் தடுப்பு […]