வயநாடு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார். பிறகு முண்டகை, சூரல் மலையில் […]