இந்தியாவை தோற்கடித்து இலங்கை 32 ஓட்டங்களால் வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று (04) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், அவர்கள் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் Washington Sundar 3 விக்கெட்டுகளையும் Kuldeep Yadav 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினரால் 42 ஓவர்கள் முடிவில் 208 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய Jeffrey Vandersay 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், அணித்தலைவர் சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்படி, Jeffrey Vandersay போட்டியின் நாயகனாக தெரிவானார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.