இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல் நாட்டிலிருந்து புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நேற்று (04) நாட்டை விட்டுச் சென்றது.

நீர் மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக கொழும்புத் துறைமுகத்தில் வைத்து வழியனுப்பி வைத்தனர்.

‘INS Shalki’ நீர்மூழ்கிக் கப்பல் நாட்டில் தங்கி இருந்த காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெறும் தெளிவு படுத்தல் நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை வீரர்கள் பங்குபற்ரியதுடன், .

குறித்த நீர்மூழ்கிக் கப்பல் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய தளங்களை பார்வையிடுவதற்காக சில பிரதேசங்களுக்கு சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டிருந்தது.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த ‘INS Shalki’ நீர் மூழ்கிக் கப்பல், 64.4 மீட்டர் நீளமும் 40 கிலோ தொன் எடையுமுடையதாகும்.

மேலும், கடற்படையினால் இச்சுற்றுலாவினால் பிராந்தியத்தில் நட்பும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் சமுத்திர வலயத்தில் பொது சமுத்திர சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு ஆதரவாக அமையும் என வலியுறுத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.