தென்னைச் பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் 1916 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று (05) முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தென்னை பயிர்ச்செய்கை சபை Coconut App என்ற பெயரில் தொலைபேசி செயலி ஒன்றையும் துரித தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் இந்த தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம் இன்று (05) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
தென்னை பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகள் எதிர்கொள்ளும் நோய்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும், உற்பத்தியை அதிகரித்து கூடிய விளைச்சலைப் பெறுவதற்கும் இந்த துரித தொலைNசி இலக்கம்; மற்றும் செயலியை பயன்படுத்த முடியும்.
இந்த துரித தொலைபேசி இலக்கமானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதில்களைப் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.
இங்கு கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர…
எமது நாட்டில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தென்னை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று எதிர்நோக்கும் பிரச்சனை தென்னந்தோப்பில் பரவும் பல்வேறு நோய்களும் பூச்சி சேதங்களும். குறிப்பாக வெள்ளை ஈ, சிவப்பு வண்டு, கறுப்பு வண்டு மற்றும் தென்னை இலை நோய் போன்ற நோய்களாகும்.
மேலும், தென்னை பயிர்ச்செய்கைக்கு உரங்கள் முறையாக இடுவதில்லை. தற்போது இந்நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 3000 மில்லியன்;களாகும், ஆனால் அந்த தொகையை 3600 மில்லியனாக அதிகரிப்பதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைய தொழில்நுட்பத்துடன் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 1916 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த அமைச்சர் வெள்ளை ஈ தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சரின் கேள்விகளுக்கு தென்னை பயிர்ச்செய்கை சபையின் அதிகாரி ஒருவர் தொலைபேசியில் பதிலளித்தார்.