திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார். வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு பல கிராமங்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருப்பதுடன் இதுவரை 380க்கும் மேற்பட்டோர்களை கொன்று குவித்துள்ளது. குறிப்பாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது மேலும் பல நூறு பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாகி உள்ளனர். அவர்களை […]