ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்… ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!

IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் தொடர் (TNPL 2024) தமிழ்நாட்டில் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடராகும். சேலம், கோவை, நத்தம், திண்டுக்கல், சென்னை ஆகிய நகரங்களில் இந்த தொடர் இந்தாண்டு நடைபெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, ஆக். 4ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது 

இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை ஷாருக்கான் வென்றார். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் மிரட்டிய இவர், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை (16 விக்கெட்டுகள்) பிடித்தார். இதன்மூலம் ஷாருக்கானுக்கு வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஷாருக்கான் மட்டுமின்றி, டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது எனலாம். அந்த வகையில், அந்த 5 வீரர்கள் குறித்து இதில் காணலாம்.

சிவம் சிங்

அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற இவரும் ஒரு முக்கிய காரணம் எனலாம். ஓப்பனிங்கில் இறங்கி அதிரடி ஆட்டத்தை பல போட்டிகளில் வெளிப்படுத்திய சிவம் சிங் 9 போட்டிகளில் 364 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக 106 ரன்களை அடித்தார். இவரின் சராசரி 45.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131.81 ஆகும்.

Presenting the SharonPly maximum sixes of the tournament this season – Shivam Sing#NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/U3sR2bxAKr

— TNPL (@TNPremierLeague) August 5, 2024

இந்த தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவரும் இவர்தான். 2024 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சிவம் சங் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். இருப்பினும் அவருக்கு வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது எனலாம். இந்திய அதிரடி ஓப்பனர்களை எதிர்பார்க்கும் அணிகள் இவரை தயங்காமல் ஏலத்தில் எடுப்பார்கள்.

முகமது அலி 

ரஞ்சி கோப்பையில் அதிக கவனம் ஈர்த்து நூலிழையில் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆஃப் ஸ்பின் போடும் முகமது அலி, இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கினார். பலம் வாய்ந்த கோவைக்கு எதிராக 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 45 ரன்களை குவித்தது மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆகும். இவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி 173 ரன்களையும் குவித்தார்.

பி. விக்னேஷ்

சீனியர்கள் கலக்கிய இந்த தொடரில் ஜூனியரான பி. விக்னேஷ் பட்டையை கிளப்பியதுதான் அனைவருக்கும் சர்ஃப்ரைஸ். 19 வயதான இவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான வாய்ப்பை ஜஸ்ட் மிஸ்ஸில் இழந்தார்.

Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#LKKvDD #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/hLvu59VOau

— TNPL (@TNPremierLeague) August 4, 2024

அஸ்வின், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட சீனியர்களுடன் கைக்கோர்த்து இடதுகை சுழற்பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டி வருகிறார் இந்த இளைஞர். இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பெரிய விக்கெட்டுகளை தூக்கியதும் இவர்தான். 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

துஷார் ரஹேஜா

திருப்பூர் அணியின் ஓப்பனரான இவர் விக்கெட் கீப்பரும் கூட… இந்த தொடரில் 9 போட்டிகளில் 324 ரன்களை குவித்து அசத்தினார். இவர்தான் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தவர்.

Presenting the Shriram Capital maximum fours winner of the tournament – #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/kiLFFCXZjU

— TNPL (@TNPremierLeague) August 5, 2024

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தேவைப்படும் ஐபிஎல் அணிகள் இவரை கொத்தாக தூக்கும் எனலாம். துஷார் ரஹேஜாவின் ஆட்டம் குறித்து அஸ்வினே டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு பின் பேசியிருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.