ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு முழுமையான சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்தபட்ச 2,500 ரூபாய்கள் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் மூலம்; 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும்.
அரசால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.
2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.01.01 வரைக்குமான ஓய்வூதியம் பெறுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்;டுள்ளது.
இது தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நேற்று (05.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
17. அரச சேவையில் நிலவுகின்ற ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல்
அரசால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன. அதற்கமைய, 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.01.01 வரைக்குமான ஓய்வூதியம் பெறுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலம் 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும். குறித்த ஓய்வுதியதாரர்களின் ஓய்வூதியம் 2016.02.25 ஆம் திகதிய பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 இன் அட்டவணை இலக்கம் 01 இற்கமைய, முழுமையான சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்தபட்சம் 2,500 ரூபாய்கள் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.