குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ள சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலில் இடம்பெற்று இருக்கின்ற எஞ்சின் விபரம் மைலேஜ் மற்றும் முக்கியமான அனைத்து தகவல்களையும் தொகுத்து முழுமையாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
சிட்ரோன் காரில் எந்த இன்ஜின் இடம்பெறப் போகிறது என்றால் ஏற்கனவே இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற C3 மற்றும் C3 ஏர்கிராஸ் என இரண்டு மாடல்களிலும் இடம்பெற்று இருக்கின்ற 1.2 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகும்.
Citroen Basalt Engine Specs and Mileage
குறைந்த விலை பாசால்டில் இடம் பெற உள்ள 1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18 கிமீ வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாப் வேரியண்டில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள எஞ்சினின் மைலேஜ் அதிகபட்சமாக லிட்டருக்கு 19.5 கிமீ வெளிப்படுத்தும் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.7 கிமீ லிட்டருக்கு வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு என 5 ஒற்றை நிறங்களுடன் கருப்பு நிற மேற்கூரையுடன் போலார் வெள்ளை, மற்றும் கார்னெட் சிவப்பு என இரு டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.
10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 40க்கும் மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் பெறுகின்றது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு தொடையின் கீழ் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர் கொண்டிருப்பதுடன் 6 ஏர்பேக்குகளை, ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் அடிப்படையாக கொண்டுள்ளது.
பாசால்ட் எஸ்யூவிக்கு நேரடியாக எதிர்கொள்ள டாடா கர்வ் தவிர மற்ற நடுத்தர எஸ்யூவி மாடல்களான ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் பல்வேறு எஸ்யூவி மாடல்களை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்தில் உள்ள மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
This News சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை appeared first on Automobile Tamilan.