60 வயதுக்கு மேற்பட் மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய்கள் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10% சதவீதமாக இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் 8.5% சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்படும் வட்டி வீதத்தை அரச வங்கிகளுக்கு மானியமாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று (05.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
16. மூத்த பிரஜைகளின் நிலையான வைப்புக்கான விசேட வட்டி வீதத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல்
சமகாலத்தில் நிலையான வைப்புக்களுக்கான வட்டிவீதம் 8.5% சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. அதனால், அதிகமான மூத்த பிரஜைகளின் வைப்புக்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர். அதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய்கள் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10% சதவீதமாக இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.