மொபைலில் மெசேஜ் அனுப்பும்போது அதில், செய்திக்கு பொருத்தமான GIF சேர்த்தால் செய்தி சரியான முறையில் போய் சேரும். ஆனால், எல்லா உணர்ச்சிகளையும் சில GIFகளால் காட்டிவிட முடியுமா? இல்லை என்பது மட்டுமல்ல, சில சமயத்தில் சரியான GIFஐக் கண்டறிவதில் சிக்கலும் ஏற்படும். ஆனால், தற்போது வாட்ஸ்-அப் அதற்கும் ஒரு தீர்வு கொண்டுவந்துவிட்டது.
ஒரு புதிய அப்டேட் மூலம், உங்கள் கற்பனையில் இருந்து உங்களுக்கான தனித்துவமான GIFகளை உருவாக்கி, உங்கள் எண்ணங்களை சரியாக, துல்லியமாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். தற்போது வாட்ஸ்அப்பில் Meta AI வசதியும் வந்துவிட்டது. இதன்மூலம், உங்கள் சொந்த GIFகளை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில், மெட்டா AI மிகவும் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த ஒரு மாதமாக, இந்த AI மிகவும் பிரபலமாகிவருகிறது. சில சமயங்களில் காமெடியும் செய்யும் AI, ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பிடித்த செல்லப்பிள்ளையாகிவிட்டது. WhatsApp இல் உங்கள் சொந்த GIFகளை உருவாக்குவது வேடிக்கையானதாக இருக்கும். தனித்துவமான GIFகளை உருவாக்க Meta AI அருமையாக உதவி செய்கிறது.
Meta AI மூலம் WhatsApp இல் GIF உருவாக்கம்
படி 1: முதலில், உங்கள் மொபைலில் WhatsApp செயலியை புதுப்பித்து, சமீபத்திய பதிப்பை அப்டேட் செய்யவும்.
படி 2: வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
படி 3: யாருக்கு GIF ஐ அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களது சாட் பகுதிக்குச் செல்லவும்.
படி 4: சாட்டில் பிளஸ் (+) பட்டனைத் தட்டவும்.
படி 5: “Imagine” இமேஜின் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 6: WhatsApp Meta AI திறக்கும். அதில், நீங்கள் எதுபோன்ற GIF செய்ய விரும்புகிறீர்கள் என்பதை எழுதவும்
படி 7: நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு ஏற்ப WhatsApp Meta AI, சில தெரிவுகளைக் காட்டும். அதில் உங்களுக்கு திருப்தி ஏற்படாவிட்டால், வேறு சில சொற்களை சேர்க்கவும்
படி 8: உங்களுக்கு சரி என்று தோன்றும் தெரிவின் மீது அம்புக்குறி பொத்தானைத் தட்டவும்.
படி 9: GIF ஐ உருவாக்க “அனிமேட்” (Animate)என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 10: சிறிது நேரத்தில் உங்களுக்கு வேண்டிய GIF உருவாகிவிடும். அது உங்களுக்கு பிடித்திருந்தால், “send” (அனுப்பு) என்ற பொத்தானை அழுத்தவும்.
உங்கள் நண்பருக்காக அல்லது உங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்காக பிரத்யேகமாக உருவான GIF உங்களுக்கு மட்டுமல்ல, யார் அதை பார்க்கிறார்களோ அவர்களுக்கும் வித்தியாசமானதாக இருக்கும்.
வாட்ஸ்அப்பில் உள்ள Meta AI, அன்றாட வாழ்க்கையில் பல விஷயங்களைச் செய்கிறது. இதற்குக் காரணம், மெட்டாவின் சிறந்த AI மாடல் லாமா 3.1 தான். GIFகளை உருவாக்குவதைத் தவிர, Meta AI பல விஷயங்களைச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
வாட்ஸ்அப்பில் Meta AI அம்சங்கள்
பரிந்துரைகள்: இரவு உணவிற்கு என்ன செய்வது அல்லது அருகில் எங்கு செல்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், Meta AI இடம் கேட்டால், உங்களுக்கு அது தொடர்பான பரிந்துரைகளைக் கொடுக்கும்.
தகவல்களை வழங்குதல்: உங்கள் அறிவை நீங்களே சுயபரிசோதனை செய்து சோதிக்க விரும்பினால், Meta AI உடன் சேர்ந்து வினாடி வினா போன்ற வேடிக்கை விளையாட்டுகளையும் விளையாடலாம்.
உரைசுருக்கம்: Meta AI மூலம் நீங்கள் எந்த கட்டுரையையும் செய்தியையும் குறுக்கலாம், அதிகப்படுத்தலாம்.
உரையாடலில் உதவி: பேசிக் கொண்டிருக்கும்போது, உங்களால் சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உதவி செய்ய உங்கள் நண்பன் Meta AI உதவி செய்யும்.