Paris Olympics Live Updates : `இறுதிப்போட்டியில் வினேஷ் போகத்; அரையிறுதியில் வீழ்ந்த ஹாக்கி அணி!'- Day 11 Updates

ஹாக்கி அணி தோல்வி!

ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கடைசி நொடி வரை போராடி இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி. இதனால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியா பின்னடைவு!

ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 1-2 என பின்னடைவு.

ஹாக்கியில் இந்தியா முன்னிலை!

ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியின் முதல் கால்பகுதி முடிந்திருக்கிறது. இந்திய அணி 1-0 என முன்னிலை!

இந்தியாவுக்கு நான்காவது பதக்கம்!

அரையிறுதிப்போட்டியிப் கியூபா வீராங்கனையை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

பதக்கத்தை உறுதி செய்துவிட்டார்.

ரியோ ஒலிம்பிக்ஸில் முட்டி உடைந்து காயமாகி காலிறுதியில் வெளியேறியிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அசோசியேஷனுடன் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது, வெல்லவில்லை.

பாரிஸ் ஒலிம்பிக்ஸூக்கு முன்பாக வீதியில் இறங்கி போராடியிருந்தார். அதிகாரத்துக்கு எதிராக மல்லுக்கட்டினார். முன்னெப்போதையும் விட இப்போது அவர் பதக்கத்தை உறுதி செய்திருப்பதுதான் பொருத்தமாக இருக்கிறது.

வினேஷின் வெற்றி அதிகார மமதைக்கு எதிரான பதிலடி.

#ParisOlympics2024

இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

மல்யுத்தம் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 5-0 என கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மல்யுத்தமும் தொடங்கியது!

மலயுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆடும் அரையிறுதிப் போட்டி தொடங்கியது.

தொடங்கியது அரையிறுதி!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதும் ஹாக்கி அரையிறுதிப் போட்டி தொடங்கியது.

ஹாக்கி அரையிறுதி!

ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி ஜெர்மனியை இன்று இரவு 10:30 மணிக்கு எதிர்கொள்கிறது.

வினேஷ் போகத்தின் அரையிறுதி!

மல்யுத்தத்தில் வினேஷ் போகத் ஆடும் அரையிறுதிப் போட்டி இன்று இரவு 10:10 மணிக்கு நடக்கிறது.

வினேஷ் தங்கம் வெல்வார்!

வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த வீராங்கனை தோல்வியே அறியாதவர். அந்தப் போட்டியில் யார் வெல்கிறாரோ அவர்தான் தங்கம் வெல்ல அதிக வாய்ப்பிருகிறது என நினைத்தோம். வினேஷ் வென்றுவிட்டார். எங்களின் குடும்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமுமே இப்போது வினேஷ் தங்கம் வெல்வார் என நம்பிக்கைக் கொண்டிருக்கிறது.

– மகாவீர் போகத் (வினேஷ் போகத்தின் பயிற்சியாளர்)

வினேஷ் போகத்துக்கு நீரஜ் ஆதரவு!

கடந்த ஒருவருடமாக வினேஷ் போகத் கடந்துவந்த விஷயங்களுக்கு, அவர் பதக்கம் வெல்லவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். உலகின் நம்பர் 1 வீரரான சுசாகியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமில்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

-வினேஷ் போகத் குறித்து நீரஜ் சோப்ரா

அரையிறுதியில் வினேஷ் போகத்!

மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உக்ரைன் வீராங்கனையை 7-4 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற நீரஜ்!

நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டருக்கு ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

களமிறங்கினார் நீரஜ்!

ஈட்டி எறிதலுக்கான தகுதிச்சுற்றில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா இப்போது களமிறங்கியிருக்கிறார்.

வினேஷ் போகத் மாஸ்!

வினேஷ் போகத் தோற்கடித்த ஜப்பானிய வீராங்கனை சுசாகி இதற்கு முன் வேறெந்த வெளிநாட்டு வீராங்கனையிடம் வீழ்ந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது

வினேஷ் போகத் அசத்தல்!

மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசாகியை 3-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

தகுதிச்சுற்றில் கிஷோர் ஜேனா!

இந்திய வீரர் கிஷோர் ஜேனா தனது மூன்று வாய்ப்புகளையும் வீசி முடிந்தார். அவரது சிறந்த எறிதல் 80.73 மீ

கிஷோர் ஜேனாவின் முதல் வீச்சு!

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் கிஷோர் ஜேனா தனது முதல் வாய்ப்பில் 80.73 மீ க்கு ஈட்டியை வீசியிருக்கிறார்.

நீரஜ் தகுதிபெற என்ன செய்யவேண்டும்? – விரிவான செய்தி கீழுள்ள லிங்க்கில்!

ஈட்டி எறிதல் தொடங்கியது!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியின் தகுதிச்சுற்று போட்டி தொடங்கியிருக்கிறது. க்ரூப் A வை சேர்ந்த வீரர்கள் இப்போது ஆடி வருகின்றனர். இந்த க்ரூப்பில்தான் இந்திய வீரர் கிஷோர் ஜேனா இருக்கிறார். நீரஜ் சோப்ரா க்ரூப் B யில் இருக்கிறார். அவரது ஆட்டம் மாலை 3:20 மணிக்கு தொடங்குகிறது.

போட்டி அட்டவணை!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை.

#Paris2024 | #IndiaAtParis2024 | #Olympics

பதக்கப்பட்டியல்

பத்தாம் நாள் முடிவில் பட்டியலில் 60-வது இடத்தில் இந்தியா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.