வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் M1 எலக்ட்ரிக் பைக்கின் புதிய டீசரில் தற்பொழுது ஹெட்லைட் தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே சில டீசர்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள டீசரின் மூலம் இந்த பைக்கின் ஹெட்லைட் அமைப்பில் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஓலா ஸ்கூட்டர்களிலிருந்து பெறப்பட்ட ஹெட்லைட் அமைப்பின் டிசைனின் மேற்பகுதியில் மட்டும் எல்இடி ரன்னிங் விளக்கானது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து மாறுபட்ட ஹெட்லைட் போல காட்சியளிக்கிறது.
இதற்கு முன்பாக வெளியான டீசரில் செயின் டிரைவ் இருப்பதை இந்நிறுவனம் உறுதி செய்து இருந்தது.
மேலும் எக்ஸ்டென்ஷன் அமைப்பும் இதில் தெளிவாக தெரிகின்றது. இது ஒரு துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் பைக் என்பதனால் விலை அனேகமாக ரூபாய் 1.20 லட்சத்திற்குள் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஒன்று அல்ல மூன்று எலக்ட்ரிக் பைக்குகளை இந்நிறுவனம் காட்சிக்கு வெளிப்படுத்த தயாராகி வருகின்றது. அதனை தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம்.
குறிப்பாக இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பைக் பிரிவில் தற்பொழுது ரிவோல்ட் RV400, ஓபென் ரோர் போன்ற பல்வேறு துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடல்கள் இந்திய சந்தையில் கிடைத்து வருகின்றன.
This News ஓலா M1 எலெக்ட்ரிக் பைக்கின் புதிய டீசரில் முக்கிய விபரம் appeared first on Automobile Tamilan.