சுற்றறிக்கையின் பிரகாரம் 2024ஆம் ஆண்டிற்கு தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், 2024.07.26ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கல்வி அமைச்சின் ஊடாக மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்குவதையோ அல்லது அதிகாரிகளை இடமாற்றுவதையோ இடைநிறுத்தியுள்ளதுடன்,
கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் மேற்படி தகவல் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.