மட்டக்களப்பு தேசிய பாடசாலையொன்றில் மாணவியொருவருக்கு சித்திரப் பாடம் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட அசௌகரியம் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கல்வி அமைச்சின் ஊடாக அறிவிப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜெயந்த இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு தொடர்பான தகவல்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மூலமாக பெறப்பட்டதாகவும், அதன் விசாரணைகளை ஆரம்பித்து உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.