கேரள மாநிலம், வயநாட்டில் ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலா, மேப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்திருக்கின்றன. இதுவரையில், 250-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. `இன்னும் எத்தனையோ?’ என்கிற அச்சம் வாட்டி வதைக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தது மட்டுமல்லாமல் வாழ்விடங்களை, உறவுகளை, வாழ்வாதாரங்களை இழந்து வழி தெரியாமல் திகைத்துக் கிடக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாட்டுக் குடும்பங்களும் அடக்கம்.
அந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டமைக்க, மறுவாழ்வு வழங்க பெரும் நிதி தேவைப்படுகிறது. இந்த நிலையில், ‘நிதி உதவி செய்யத் தயார்’ என்று விகடன் வாசகர்கள் பலரும் தொடர்ந்து மெயில், போன் மூலமாகக் கேட்ட வண்ணமிருக்கிறார்கள். ஆபத்துக் காலங்களில் கைகொடுக்க எப்போதுமே விகடன் வாசகர்கள் தயங்கியதில்லை. அந்த வகையில், தற்போதும் முன்வந்திருக்கிறார்கள்.
தற்போதைய சூழலில், நிதி உதவியைக் கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (சிஎம்டிஆர்எஃப்) நேரடியாகவே வாசகர்கள் அனுப்பிவைப்பது, உதவியை விரைவாகக் கொண்டு சேர்ப்பதாக இருக்கும். எனவே, கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி உதவிகளைச் செய்யக் கேட்டுக்கொள்கிறோம்.
நிவாரண நிதியைப் பெற கேரள மாநில அரசு ஏற்படுத்தியிருக்கும் இணையதளம் https://donation.cmdrf.kerala.gov.in/
A/c Number: 67319948232
A/c Name: CHIEF MINISTER’S DISTRESS RELIEF FUND ACCOUNT NO. 02
Branch: City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028 | SWIFT CODE : SBININBBT08
Account Type: Savings | PAN: AAAGD0584M
இந்தத் தளத்தில் அனைத்து வங்கிகளின் க்யூஆர் கோட்-களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஸ்கேன் செய்து, யு.பி.ஐ மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
இங்கே SBI க்யூஆர் கோட் கொடுக்கப்பட்டுள்ளது.