கோவை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன் என்றும், இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார். இந்த திட்டத்தின்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் உள்ள 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய […]