நாட்டின் செங்கல் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலைகளுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் அறிமுகம்

கொரிய அரசாங்கத்தின் அனுசரணையில் இலங்கையில் செங்கல் மற்றும் ஓட்டுத் தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவதனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வாக்கும்புர கடந்த புதன்கிழமை (06) கொரிய முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உற்பத்தியில் காணப்படும் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு, சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகை வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றாடல் நேசமிகு முறையூடாக நிலைபேறானதாக முன்னேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.