Prince Jewellery: புத்தம் புது ஆபரணங்களின் அணிவகுப்பு; நீங்கள் வருகை புரிய இதுவே உகந்த தருணம்!

ஆம். தனித்துவம் மிக்க தங்க நகைகளுக்கு என்று வாடிக்கையாளர்களின் அபிமானத்தைப் பெற்ற பிரின்ஸ் ஜுவல்லரி , தங்களுடைய புத்தம் புதிய நகைத் தொகுப்பை வாடிக்கையாளர்களுக்குப் படைப்பதில் பெருமை கொள்கிறது.

தங்களுடைய மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்  இன்ப அதிர்ச்சியாக , பிரின்ஸ் ஜுவல்லரி , தனித்தன்மை மிக்க சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 150 / 150 சலுகை என்பது தான் அது. இந்த சலுகையால் , தங்களுடைய தங்கத்தின் மதிப்பு அதிகம் ஆவதுடன் புதிதாக வாங்கும் நகைகளில் கணிசமான அளவிலான சேமிப்பையும்  இது நல்குகிறது. இந்த புத்தம் புதிய ஆபரணத் தொகுப்பு , பாரம்பரிய வடிவத்திலிருந்து தற்கால வடிவமைப்பு வரையிலான மதிப்புமிக்க வாடிக்கையார்களின் விருப்பத்தை முழுமையாக கவனத்தில் கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்டவை . இந்த தொகுப்பில் மிகவும் நுணுக்கமான வடிவமைப்புகள் முதல் காலத்தை வென்று நிற்கும் வடிவமைப்பு வரையிலும் அதிநவீன வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளன. ஆம் . ஒவ்வொருவரின் விருப்பத் தேர்வுக்கு ஏற்ற ஆபரணங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தாவதுடன் வாங்கி அணிந்தவுடன் உங்கள் அழகுக்கு பேரழகைக் கூட்டும்.

Prince Jewellery

உங்கள் புன்னகை முகத்திற்குப் பொலிவூட்டும் பொன் நகை , வைர நகை , திருமணக் கோலம் காணும் மணமகளுக்கான நகை , பணிக்குச் செல்லும் பெண்மணிகள் அன்றாடம் அணிவதற்கான நகைகள் , லேசான எடை கொண்ட நகைகள் என்று நீங்கள் தேர்ந்தெடுக்க ஏற்ற ஆபரணங்கள் உங்களுக்காக அணிவகுக்கின்றன. உங்களை வசீகரிக்கும்  இந்த நகைத் தொகுப்பின் நகைகளை உங்கள் வசமாக்கிக் கொள்ள  ஏதுவாக , பிரின்ஸ் ஜுவல்லரி 150 / 150 சலுகையை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் , தங்களுடைய பழைய தங்க ஆபரணத்தை புதிய  தங்க நகைக்காக , எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது கிராம்  ஒன்றுக்கு ரூ. 150 தொகையை கூடுதலாகப் பெறுவார்கள். மேலும் , அவர்கள் வாங்கும் அனைத்து புதிய தங்க நகைகளுக்கும்   கிராம் ஒன்றுக்கு ரூ. 150 தள்ளுபடியைப் பெறுவார்கள் . 

இந்த இரட்டை நன்மை , உங்கள் தங்கத்தின் மதிப்பை அதிகரிப்பதுடன் , புதிய அணிகலன்களை மிகுந்த சிக்கனமான வழிமுறையில் வாங்கிட உறுதுணை புரியும். பிரின்ஸ் ஜுவல்லரியின் இயக்குநர் திரு. ஜோசப் பிரின்ஸ் அவர்கள் , இது குறித்து பேசுகையில் கூறியதாவது : 

“ நேர்த்தியும் வேலைப்பாடும் நவீன யுகத் தன்மையையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த புத்தம் புதிய நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்துதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். 150 / 150 என்பது எங்களுடனேயே பயணித்து வருகிற வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் செலுத்தும் நன்றி எனலாம். புதிய வாடிக்கையாளர்கள் ,  எங்கள் படைப்புகளின்  வேலைப்பாட்டையும் தனித்துவத்தையும்  அறிந்து கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்”. 

Prince Jewellery
Prince Jewellery
Prince Jewellery
Prince Jewellery

இந்த அரிய சலுகை , எந்த ஜுவல்லரியில் வாங்கப்பட்ட அனைத்து பழைய தங்க நகைகளுக்கும் பொருந்தும் என்பதால் எக்ஸ்சேஞ்ச்களுக்கு 100 % மதிப்பை அளிக்கும். எங்களுடைய புத்தம் புதிய நகைத் தொகுப்பில் பாரம்பரிய ஆபரணங்களும் இன்றைய கால வடிவமைப்பு நகைகளும் உள்ளதால் , எந்த நிகழ்ச்சிக்கும் விசேடத்திற்கும் அணிந்து செல்ல ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது  . 

புத்தம் புதிய நகை கலக்ஷன் உடன் 150 / 150 சலுகை உடன் வருவதால் , பிரின்ஸ் ஜுவல்லரி்க்கு நீங்கள் வருகை புரிய இதுவே உகந்த தருணமாகும். உங்களுடைய பழைய தங்கத்திற்கு அதிகம் பெறவும் புதிய அழகான நகை வாங்குவதில் சேமிப்பையும் அளித்திடும் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாதீர்கள் . 

இந்த சலுகை, பிரின்ஸ் ஜுவல்லரியின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஷோரூம்களில் மட்டுமே . 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.