கோவை: கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் சார் பதிவாளர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றதும் அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் கோவை காட்டுநாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் […]