இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 ஓகஸ்ட் 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 ஓகஸ்ட் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 50 மி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.