புதுடெல்லி: மக்களவையில் பூஜ்ய நேரத்தின் போது மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர் பேசிய தாவது:
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பது மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளி்ல சைபர் குற்ற பணிகளில் இந்தியர்கள் கட்டாயமாக ஈடுபடுத்துவது ஆகியபிரச்சினைகளை மத்திய அரசுதீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முன்னுரிமை தந்து செயல்பட்டு வருகிறது.
ரஷ்ய ராணுவத்தில் 91 இந்தியர்கள் சேர்க்கப்பட்டிருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 8 பேர் உயிரிழந்துவிட்டனர். 14 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்த நிலையில், 69 பேர்ரஷ்ய ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்காக காத்திருக்கிறோம். கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின்போதும் பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.
ரஷ்ய ராணுவத்துக்கு சேவைசெய்வதற்காக இந்தியர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர் என்று கூறப்படுவது தவறு. இந்தியர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதே இந்தகுழப்பத்துக்கு காரணம். வேறுவேலைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் ரஷ்யராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய ராணுவத் தில் பணிபுரியும் கடைசி இந்தியர் வெளியேறி தாய்நாடு திரும்பும் வரை மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.