கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி செல்லும் சாலையில் ஒரு நாளைக்கு 1.2 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் இந்த சாலையை அகலப்படுத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது. தற்போது 90 அடி அகலம் கொண்ட இந்த சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை […]