Hot Spot 2: "இயக்குநர் மேல எனக்குப் பயங்கர கோபம் வந்துச்சு! ஆனா…" – விஷ்ணு விஷால் சொல்லும் லாஜிக்

கேஜேபி டாக்கீஸ் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் `ஹாட் ஸ்பாட்’.

பல விதமான சர்ச்சைகளைக் கடந்து வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது `ஹாட் ஸ்பாட்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் வழங்கவுள்ளார். அதன் அறிவிப்பு நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எப்போதும் நல்ல கதைகள் வெற்றிபெறும். ‘ஹாட் ஸ்பாட்’ டிரெய்லர் வெளியாகும்போது என்ன டிரெய்லர் இது, ஏன் இப்படி இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள் என்று எனக்கு விக்னேஷ் மீது கோபம் வந்தது.

ஹாட் ஸ்பாட் 2

டிரெய்லர் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பிறகு அந்தப் படம் என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்த தைரியம் எனக்குப் பிடித்திருந்தது. இப்போது இருக்கிற காலத்தில் குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தை என் மகனைப் பார்க்க வைத்தேன்.

இந்தப் புதிய பாகத்தில் இடம்பெற்றுள்ள 4வது கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கண்டிப்பாக மாற்றுக்கருத்தை ஏற்படுத்தும். அதன் மூலமாக பிரச்னை வந்தாலும் பரவாயில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நல்ல கதை சினிமாவிற்குத் தேவை. நிறைய படங்களில் இரண்டாம் பாகம் என்பதால் அந்தத் தலைப்பைப் பார்த்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் அப்படங்கள் சரியாக ஓடுவதில்லை, தோற்றுப் போகின்றன. நானும் இரண்டாம் பாகம் படங்களில் நடிக்கிறேன், அதற்கான அறிவிப்பும் விரைவில் வரும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் வாக்குவாதம் குறித்த கேள்விக்கு, “நானே நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பதால் எனக்கு இந்தப் பஞ்சாயத்து வரவில்லை.

விஷ்ணு விஷால்

சினிமா மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது, வியாபார முறை மாறிவருகிறது. என்னைவிடப் பெரியவர்கள் இது தொடர்பாகப் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு தயாரிப்பாளராக எனக்கே தலை சுற்றுகிறது. நிறைய விஷயங்கள் மாற வேண்டும், தற்போதைய வியாபாரம் தெரிந்து கொண்டு சிலவற்றை மாற்ற வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.