ஒருநாள் போட்டிகளே இல்லை! டெஸ்ட், டி20 மட்டும் தான்! என்ன செய்ய போகிறது இந்தியா?

இந்தியா சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டி20யில் சூரியகுமார் தலைமையில் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் போட்டியில் 2-0 என தோல்வியடைந்தது. இந்நிலையில், ஒருமாதம் இந்திய அணியின் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட உள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு அதிரடி ஆண்டு அமைய உள்ளது. 2024-25 சீசனில் ஹோம் மேட்ச் மற்றும் அவே மேட்ச் என பல தொடர்கள் அடுத்தடுத்து வர உள்ளது. பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதே சமயம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

இந்த ஆண்டு முழுவதும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். செப்டம்பர்-அக்டோபர் மாதம் பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகின்றனர். அதன் பிறகு நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர். பிறகு நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றனர். டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும், 2025 ஜனவரி-பிப்ரவரியில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளனர். அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் நடைபெற உள்ளது.

2024-25 சீசனில் இந்தியா விளையாடும் போட்டிகள்

வங்கதேசத்தின் இந்திய சுற்றுப்பயணம் 2024 

இந்தியா vs வங்கதேசம், 1வது டெஸ்ட்: செப்டம்பர் 19-செப்டம்பர் 23, சென்னை 
இந்தியா vs வங்கதேசம், 2வது டெஸ்ட்: செப்டம்பர் 27-அக்டோபர் 1, கான்பூர்

இந்தியா vs வங்கதேசம், 1வது டி20: அக்டோபர் 6, தர்மசாலா 
இந்தியா vs வங்கதேசம், 2வது டி20, அக்டோபர் 9, டெல்லி 
இந்தியா vs வங்கதேசம், 3வது டி20, அக்டோபர் 12, ஹைதராபாத்

நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் 2024 

இந்தியா vs நியூசிலாந்து, 1வது டெஸ்ட்: அக்டோபர் 16-அக்டோபர் 20, பெங்களூரு 
இந்தியா vs நியூசிலாந்து, 2வது டெஸ்ட்: அக்டோபர் 24-அக்டோபர் 28, புனே 
இந்தியா vs நியூசிலாந்து, 3வது டெஸ்ட்: நவம்பர் 1-நவம்பர் 5, மும்பை

இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் 2024 

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 1வது டி20: நவம்பர் 8, டர்பன் 
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2வது டி20: நவம்பர் 10, க்கெபெர்ஹா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 3வது டி20: நவம்பர் 13, செஞ்சுரியன் 
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 4வது டி20: நவம்பர் 16, ஜோகன்னஸ்பர்க்

இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25)

இந்தியா vs ஆஸ்திரேலியா, 1வது டெஸ்ட்: நவம்பர் 22-நவம்பர் 26, பெர்த் 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2வது டெஸ்ட்: டிசம்பர் 6-டிசம்பர் 10, அடிலெய்டு 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3வது டெஸ்ட்: டிசம்பர் 14-டிசம்பர் 18, பிரிஸ்பேன் 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட்: டிசம்பர் 26-டிசம்பர் 30, மெல்போர்ன் 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட்: ஜனவரி 3-ஜனவரி 7, சிட்னி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.