புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை (பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா- கிராமின்) 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் மேலும்2 கோடி வீடுகள் கட்ட மானியம் அளிக்கப்படும். இந்த மானியம் சமவெளிப் பகுதியில் பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சமும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ரூ.1.30 லட்சமும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.