கூகுள் குரோம் யூஸ் பண்ணறீங்களா.. ஹேக்கர்ஸ் அட்டாக் செய்யலாம்… அரசு எச்சரிக்கை…

Google Chrome பயன்படுத்தும் பயனர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிறுவனமான இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In),  ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கணினி ஹேக் செய்யப்பட்டு உங்கள் முக்கியமான தரவை திருடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூகுள் குரோமை விரைவில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் குரோமில் உள்ள சில தொழில்நுட்ப தவறுகளை பயன்படுத்தி, ஹேக்கர்கள் கணினியை அணுகலாம் என்றும் இது உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் CERT-In எச்சரித்துள்ளது. சைபர் ஸ்கேமர்கள் பயனர்களின் கணினியில் செட்டிங்ஸில் நுழைந்து முக்கியமான தரவைத் திருடலாம்.

ஆப்பிள் மற்றும் கூகிள் இரண்டு பிரபலமான உலாவிகளைக் கொண்டுள்ளன, அதாவது சஃபாரி மற்றும் குரோம். இதில் கூகுள் குரோம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு இணைய உலாவிகளிலும் முக்கியமான ஒரு பாதுகாப்பு பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பல வருடங்களாக இருந்தாலும் சமீபத்தில் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக, ஹேக்கர்கள் உங்கள் கணினி அல்லது தொலைபேசியில் ஊடுருவக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கணிணி அல்லது ஸ்மார்போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?

CERT-In குறிப்பிட்டுள்ள இந்த ஆபத்துக்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:

Google Chrome இன் சமீபத்திய அப்டேடை கொண்டு உங்கள் சாதனத்தைப் புதுப்பிக்க வேண்டும். அப்பேட் விபரம்

1. தற்போது, ​​Windows மற்றும் MacOS க்கான நிலையான சேனல் பதிப்பு 127.0.6533.88/89.

2. Linux க்கான நிலையான சேனல் பதிப்பு 127.0.6533.88. 

மேற்கண்ட பதிப்புகளில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

Chrome-ன் இணையப் பதிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக கூறியுள்ள CERT-In, இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் கணினியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடியும் என எச்சரித்துள்ள நிலையில், Google Chrome ஐப் புதுப்பிக்க, பயனர்கள் உலாவியின் மெனுவிற்குள் செல்ல வேண்டும், அதன் பிறகு ஹெல்ப் ( Help ) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, நீங்கள்About Google Chrome என்பதற்கு செல்ல வேண்டும், அதன் பிறகு தானாகவே புதுப்பிப்புகளை சரிபார்க்கும். புதுப்பிக்க வேண்டி இருந்தால், அது தானாகவே அப்டேட் செய்யும் வேலையைத் தொடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.