கண்ணூர்: வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். அப்போது, குஜராத்தில் அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவின்போதும் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதை சுட்டிக்காட்டினார். ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டது. அங்குள்ள பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமகா பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகின. குறிப்பாக மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு […]